Wednesday, December 30, 2009

பைல்களை எளிதாகக் கையாள பிரீ கமாண்டர்

மிகச் சிறிய அளவில் பைல்களைப் பயனுள்ள வகையில் கையாள நமக்குக் கிடைக்கும் புரோகிராம் பிரீ கமாண்டர் (Free Commander) நாம் பைல்களை காப்பி செய்திட, இன்னொரு இடத்திற்கு நகர்த்திட விண்டோஸ் எக்ஸ்புளோரரையே நாடுகிறோம். இது பைல்களைக் கையாள ஒரு விண்டோ மட்டுமே காட்டுகிறது.

ஒரு டிரைவிலிருந்து இன்னொரு டிரைவில் உள்ள போல்டருக்கு பைல்களை இழுத்துப் போட வேண்டும் என்றால் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி விண்டோ ஒன்றைக் கூடுதலாகத் திறக்க வேண்டும். இந்த பிரச்னையை பிரீ கமாண்டர் தீர்த்துவைக்கிறது.

அருகருகே இரண்டு விண்டோக்களைத் திறந்து வைத்து பைல்களைக் காட்டுகிறது. இதனால் பைல் பரிமாற்றத்தினை மிக எளிதாக மேற்கொள்ளலாம். இந்த புரோகிராமில் இன்னொரு பயனும் உண்டு. இதனை உங்கள் பிளாஷ் டிரைவில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செய்த பென் டிரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் பயன்படுத்துகையில் இந்த புரோகிராமினை இயக்கி பைல்களை முன்பு கூறியது போல எளிதாகக் கையாளலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment