Saturday, January 2, 2010

பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பாதுகாப்பு மென்பொருட்கள்

இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன. அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன.

பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகுப்புகளிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களை சப்போர்ட் செய்கிறது. அத்துடன் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வடிவமைக் கப்பட்டுள்ள பல ஆட் ஆன் தொகுப்புகளும் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றையும் பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்கிறது.

வங்கிக் கணக்குகள் கையாளுதல், ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வாங்குதல், அவற்றிற்குப் பணம் செலுத்துதல், சோஷியல் நெட்வொர்க் கிங்கில் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளல், கல்வி கற்றல் போன்ற பணிகளில் நாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவதால், ஒரு பாதுகாப்பான சூழ்நிலை நமக்கு அவசியமாகிறது.மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

1.Adblock Plus

இந்த ஆட் –ஆன் தொகுப்பு வாரந்தோறும் ஏறத்தாழ 8 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பேனர்கள், விளம்பரங்களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களை முற்றிலுமாய்த் தடுக்கிறது.

இந்த தொகுப்பைப் பதிந்த பின்னர், ஏதேனும் பேனர் விளம்பரம் வந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கான்டெக்ஸ்ட் மெனுவில் Adblock Plus என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அந்த பேனர் மீண்டும் ஒரு முறை அந்த கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்படமாட்டாது. அல்லது தொகுப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்குகையில் பில்டர் பயன்பாட்டினை இயக்கிவிட்டால் இது போன்ற பேனர் விளம்பரங்களை அண்டவிடாது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2.Better Privacy

பொதுவாக குக்கிகளால் நமக்கு சில நன்மைகள் இருந்தாலும், பல குக்கிகள் நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் வேலைக்கே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம் பிரவுசிங் முடிந்த பின்னர் அழித்துவிடலாம். ஆனால் சில குக்கிகள் அழிக்கப்பட முடியாத வகையில் உருவாக்கப்பட்டு பதிக்கப்படுகின்றன. இவற்றை சூப்பர் குக்கிகள் என அழைக்கின்றனர். இவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வேலையை இந்த ஆட் ஆன் புரோகிராம் தருகிறது.இந்த பிளாஷ் குக்கிகளை எல்.எஸ்.ஓ. குக்கிகள் எனவும் அழைக்கின்றனர். இவை நம் கம்ப்யூட்டரில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் பதியப்படும். ஒரு குக்கியின் அளவு 100 கேபி. வழக்கமான சாதாரண குக்கியின் அளவு 4 கேபி மட்டுமே. இந்த குக்கிகளை பிரவுசர்கள் அறிவதில்லை. எல்.எஸ்.ஓ. குக்கிகளை பிரவுசர்களாலும் அழிக்க முடிவதில்லை. இந்த வகை குக்கிகள் சிஸ்டத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாகப் பெற்று, நாம் அறியாமலேயே மற்ற கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தன்மை கொன்டவை.

பிளாஷ் குக்கிகள் எப்போது சென்ட்ரல் சிஸ்டம் போல்டரில் தான் பதியப்படுகின்றன. எனவே இவை நீக்கப்படாது. நீக்குவதும் சிரமம். Better Privacy புரோகிராம் ஒவ்வொரு முறை நீங்கள் பிரவுசரை மூடும்போது, இவை அனைத்தையும் நீக்கிவிடுகிறது. அல்லது ஒவ்வொரு பிளாஷ் குக்கியாக இந்த புரோகிராம் மூலம் பெற்று அவற்றை நீக்குவதா, வைத்துக் கொள்வதா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

3. No Script

இணையத்தில் எந்த வகையில் நம்மை அழிக்கும் புரோகிராம்கள் வரும் என்று சொல்ல முடியாத வகையில் பல வகை புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் ஸ்கிரிப்ட் என்பதுவும் ஒன்று. இதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.

2006 ஆம் ஆண்டின் சிறந்த புரோகிராமாக இது விருது பெற்றது. பிரவுசருக்கான சரியான பாதுகாப்பினைத் தருகிறாது. இந்த புரோகிராம் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றை நாம் அனுமதிக்கும் நேரத்தில், அனுமதிக்கும் தளங்களில் இருந்து வந்தால் மட்டுமே இயங்க வைக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

4. WOT Web of Trust

இணையப் பயன்பாட்டின் போது, நம்முடைய கம்ப்யூட்டருக்குள் நம் அனுமதியின்றி சிலர் ஊடுருவி, பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் இந்த புரோகிராம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும்.

ஆபத்து நிறைந்த இணைய தளங்களுக்கு நீங்கள் செல்கையில் இது பலத்த எச்சரிக்கையினைத் தரும். ஓர் இணைய தளம் ஸ்பேம் மற்றும் மால்வேர்களை அனுப்ப முயற்சிக்கையில் இந்த புரோகிராம் அந்த செயலை மோப்பம் பிடித்து அறிந்து உடனே எச்சரிக்கை கொடுத்து, நம்மை அந்த தளத்தின் இணைப்பைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லும். இந்த புரோகிராமில் பல லட்சம் தளங்களின் தன்மை குறித்த தகவல் பதியப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

5.Stealther

நாம் இணையத்தில் உலா வருகையில், தகவல்களைத் தேடுகையில், இமெயில் களைப் பெறுகையிலும் அனுப்பும்போது நம் இணையப் பயணம் குறித்த பல தடயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ், டிஸ்க் கேஷ், பைல் ஹிஸ்டரி, படிவங்களில் தரப்படும் தகவல்கள் என இவை பலவகைப்படுகின்றன. இது போன்ற எந்த தடயமும் இல்லாமல் இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இந்த புரோகிராம் நாம் பிரவுசரை இயக்கியவுடன் தானும் இயங்கி தடயங்களை ஏற்படுத்தும் புரோகிராம் பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

6. Roboform Toolbar

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த புரோகிராம் உதவுகிறது.பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

7. Key Scrambler Personal

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை, நாம் அறியாமலேயே நம் கம்ப்யூட்டர் களுக்குள் அமர்ந்து அறியும் புரோகிராம் களில் ஒரு வகை கீ லாக்கர் என்பதாகும். இவை நாம் அழுத்தும் கீகளைப் பதிவு செய்து பின் இதனைப் பதித்தவருக்குத் தரும். இன்டர்நெட் மையங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொது கம்ப்யூட்டர்களில் சிலர் இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவார்கள். ஏன், நம் கம்ப்யூட்டர்களில் பிறரை அனுமதித்தால், நம் அனுமதியில்லா மலேயே அவர்கள் இந்த வேவு பார்க்கும் வேலையை மெற்கொள்ளலாம். இத்தகைய கீ லாக்கர்கள் புரோகிராம்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது இந்த Key Scrambler Personal புரோகிராம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பிரவுசர் பாதுகாப்பு என்பது நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தடுப்பு வழியாகும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பயர்பாக்ஸ் டவுண்லோட் மேனேஜர்

இணையத்தில் இருந்து நமக்குத் தேவையான புரோகிராம்கள் மற்றும் படங்களை நாம் பிரவுசர்கள் தரும் வசதி மூலம் டவுண்லோட் செய்கிறோம். பயர்பாக்ஸ் பிரவுசர் தரும் டவுண்லோட் வசதி சிறப்பாகவே உள்ளது. இருந்தாலும் டவுண்லோட் செய்வதில் நமக்கு வேகம் உட்பட பல வசதிகள் கிடைக்கும் வகையில் பல டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று DownThemAll என்னும் புரோகிராம் ஆகும். இதனைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதன் வேக மும், டவுண்லோட் செய்யப் பட வேண்டிய புரோகிராம் களை வரிசையாக வைத்து இறக்கும் லாவகமும், இடை யே நின்று போனால், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் டவுண்லோட் செய்திடும் வகையும் மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இது வழக்கத்தைக் காட்டிலும் 400% வேகத்தில் பைல்களை டவுண்லோட் செய்திடும் எனத் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு வேகம் உள்ளதா என்று அறிய முடியவில்லை என்றாலும், வேகம் அதி வேகம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த புரோகிராமில் தரப்பட்டிருக்கும் இன்னொரு ஆப்ஷன் மிகச் சிறப்பாக உள்ளது. ஓர் இணையப் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு லிங்க் அல்லது இமேஜ் ஆகியவற்றையும் இதன் மூலம் டவுண்லோட் செய்திட முடியும். அதனால் தான் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்கிறது. பின் பில்டர்கள் மூலம் நாம் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ளலாம்.

எந்த பைல்கள் என்பதற்கு செக் பாக்ஸ் களைக் கொடுத்து ஆப்ஷன் கேட்கிறது. இதிலேயே டவுண்லோட் செய்வதற்கான புரோகிராம் மற்றும் படங் களுக்கு புதுப் பெயர் கொடுக் கலாம்; எந்த டைரக்டரியில் பதிய வேண்டும் என்பதனை உறுதி செய்திடலாம்; சப்டைரக்டரிகளை உருவாக்கலாம்; மேலும் இது போல பல வேலைகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இந்த பைல்களை குறிப்பிட்ட டைரக்டரிகளில் டவுண்லோட் செய்திடக் கட்டளை கொடுத்து விட்டு நகர்ந்து விடலாம். கம்ப்யூட்டர் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை.

பயர்பாக்ஸ் பிரவுசருக்கு இது ஓர் அருமையான தோழனாக இயங்குகிறது. மிகப் பெரிய அளவிலான பைல்களை டவுண்லோட் செய்வதற்கு இது சிறந்த துணையாக உள்ளது. இந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 1.1.4 ஆகும். இது பயர்பாக்ஸ் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான பயர்பாக்ஸ் 3.5 உடன் இணைந்து செயலாற்றுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பழசாகிப் போன ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள்

கடந்த 30 ஆண்டுகளாக பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு இருந்து கொண்டு இருக்கிறது. அப்போது தோன்றிய சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இன்னும் சில பழக்கத்தில் உள்ளன. பலவற்றிற்கு குட் பை சொல்லி முடக்கிவிட்டோம். AmigaOS! போன்ற சிஸ்டங்களை வருத்தத்துடன் ஒதுக்கிவிட்டோம். சிலவற்றை (Adios, Windows Me!) கொஞ்சம் தள்ளித்தான் இருங்களேன் என்று காட்சிப் பொருளாக வைத்திருக்கிறோம். சிலவற்றை (MSDOS) கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாகத் தள்ளி வாசலில் வைத்து எப்போதாவது ஒருமுறை பார்த்துக் கொள்கிறோம்.

தகவல்களைத் திரட்டி கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்டு பழசாகிப் போன ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் குறித்து இங்கே தகவல்கள் தருகின்றேன். முதலில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டியது மட்டுமே. அதனை ஒருவர் விரும்புவது அவசியமில்லை. விண்டோஸ் இயக்கத்தில் விண் ஆம்ப் இயக்கம் அதிகமாக விரும்பப்படும். ஏனென்றால் அது வீடியோவையும் ஆடியோவையும் தருகிறது. ஆனால் விண்டோஸ் இயக்கத்தை யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் இதயம் துடிப்பது போல கம்ப்யூட்டர் இயங்குகையில் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அதனை இயக்குபவர் அதனை விரும்புகின்றாரா என்ற கேள்விக்கு இடமில்லை.

சி.பி. பார் எம்

புரோகிராமிங் அப்ளிகேஷன்களை எளிதாக இயக்க ஒரு சிஸ்டம் தேவை என்று முயற்சித்த போது டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய கேரி கில்டால் (Gary Kildall) சி.பி. பார் எம் (Control Program for Micro computers) என்ற ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கினார். மைக்ரோ கம்ப்யூட்டர் பயன்பாடு அன்றிலிருந்துதான் தொடங்கியது.

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரு புரட்சியை இது தொடங்கி வைத்தது. வேர்ட் ஸ்டார் மற்று டிபேஸ் (WordStar and dBase)இதன் அடிப்படையில் இயங்கும்படி முதலில் தொடங்கப்பட்டன. டாட் ப்ராம்ப்ட் (நம் கட்டளையை வாங்க துடிக்கும் புள்ளி – இப்போதைய மவுஸ் கர்சர் போல) DIR கட்டளை இதோடு சம்பந்தப்பட்டவை தான். எட்டு கேரக்டர் மற்றும் மூன்று துணை கேரக்டர்களில் பைல் பெயர் என்பதுவும் இந்த சிஸ்டம் உருவாக்கிய வரைமுறைகள்தான்.

டாஸ் சிஸ்டம்

இன்றும் இயங்கும் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெரியப்பா இந்த சி.பி. பார் எம் தான் என்றால் அது மிகையாகாது. டாஸ் சிஸ்டம் மற்றும் ஆப்பிள் ஐஐ பல்லாண்டு பெர்சனல் கம்ப்யூட்டர் களை இயக்கியது.

டாஸ் இயக்கம் பல பெயர்களில் பல நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. 1981ல் ஐ.பி.எம். கம்ப்யூட்டருடன் தரப்பட்ட PCDOS சிஸ்டம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அதன் MSDOS சிஸ்டத்திலிருந்த் உருவாக்கப்பட்டது. இதனை QDOS என்றும் அழைத்தனர். 1987ல் வந்த எம்.எஸ். டாஸ் 3.3 பலரின் விருப்ப ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தது. அதன் பதிப்பு 4 வந்த பின்னரும் பலர் 3.3 பதிப்பையே பயன்படுத்தி வந்தனர்.

அத்தனை டாஸ் சிஸ்டங்களும் ஒன்றும் சாதாரண பயன்பாட்டிற்காக வந்தவை அல்ல. அதன் கட்டமைப்பில் புரோகிராம்களை அமைப்பது பெரிய சவாலாகவே இருந்து வந்தது. இன்னும் இது நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது. ஸ்டார்ட் அழுத்தி ரன் விண்டோவில் cmd எனத் தந்தால் டாஸ் இயக்கம் கிடைக்கும். இன்னும் பலர் பழைய ஞாபகம் வந்தால் பைல்களைக் கை யாள இதனைப் பய ன்படுத்துகின்றனர்.

மேக் சிஸ்டம் 1.1.

பதினாறு ஆண்டுகள் இந்த சிஸ்டத்தின் ஒன்பது பதிப்புகள் வெளியாகின. மேக் சிஸ்டம் வெகு வேகமாகப் பலரின் மதிப்புக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து வந்தது மேக் சிஸ்டம் 7. இந்த சிஸ்டத்தின் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இதனை மலையாக நம்பி இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.

அடியோஸ்அமிகாஸ் (Adios, Amigas)

ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்வது இன்றைய பெர்சனல் கம்ப்யூட்டரின் அடிப்படை அம்சமாக இருக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்த முடியும் என முதலில் காட்டியவை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களே. ஆனால் அவ்வளவாக மக்களிடம் இவை எடுபடாத காரணத்தினால் சுட்டிக் காட்டிய சிஸ்டங்கள் என்ற பெயருடன் நின்று போனது. இருப்பினும் மேற்கு நாடுகளில் இன்னும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கோலி ஜியோஸ் (Golly GEOS)

மேக் இன்டோஷ் சிஸ்டம் வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின், விண்டோஸ் நுழைந்த அந்த நேரத்தில் கலிபோர்னியா புரோகிராமர்களால் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டது. விரைவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சிஸ்டங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இருப்பினும் இந்த இயக்கத்தில் மெமரியைக் கையாள்வது, தொடர்ந்து வந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கு பிரச்சினையாக இருந்ததால் மக்கள் விண்டோஸ் பக்கம் சாயத் தொடங்கினர்.

பி .எஸ். (BeOS)

1991ல் ஆப்பிள் நிறுவனம் தன் பவர் பிசி சிஸ்டத்தை வெளியிட்டபோது பி இன்க் என்ற நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக பி ஓ.எஸ். சிஸ் டத்தை மேக் பிளாட்பாரத்தில் இயங்கும் வகையில் வெளியிட்டது. காலப் போக்கில் இந்நிறுவனத்தின் எதிர்பார்ப் புகள் நிறைவேறாமல் நிதிப் பிரச்சினயைச் சந்தித்த இந்நிறுவனம் இந்த சிஸ்டத்தை பாம் (Palm) நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அதோடு இது மறைந்துவிட்டது எனலாம்.

விண்டோஸ் 95

அளவுக்கதிகமான ஒரு விற்பனை விளம்பரத்துடன் வெளியான சிஸ்டம் இது. இதன் விற்பனை யுக்தியைப் பின்னாளில் மார்க்கட்டிங் சுனாமி எனப் பலர் வர்ணித்தனர். முதல் முறையாக பயனாளர்களுக்கு எளிதான ஒரு கிராபிகல் சிஸ்டம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது தொடர்ந்து முன்னேற்றமடைந்து இன்று உலகின் 85 சதவிகித கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் சிஸ்டமாக இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து வெளியான பல விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மறக்கப்பட்டு இப்போது எக்ஸ்பி மற்றும் விஸ்டா மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இன்றும் சில இடங்களில் இந்த பழைய சிஸ்டங்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர்களைக் காணலாம். எங்களுக்கு இது போதும் என டாஸ் மற்றும் வேர்ட் ஸ்டார் பயன்படுத்துபவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். இருப்பினும் வேகமாக மாறி வரும் கம்ப்யூட்டர் உலகில் பழைய சிஸ்டங்கள் பல மறக்கப்பட்டுத்தான் போகும் என்பது மாற்றமுடியாத நியதியாகும்.

விண்டோஸ் வந்த வரலாறு....!!!

உலகின் 90 சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) முதல் பதிப்பிலிருந்து , இன்று வெளியாகியுள்ள விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை இங்கே காணலாம்.

1985 : விண்டோஸ் 1

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் மவுஸ் பயன்பாட்டை தந்தது.

1987 : விண்டோஸ் 2

ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.

1990 : விண்டோஸ் 3

1990 ஆம் ஆண்டு மே 22 வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி சி.டிக்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.

1991 : விண்டோஸ் 3.11

விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.

1992 : விண்டோஸ் 3.1

ஏப்ரல் மாதம் வெளியான இந்த பதிப்பு வெளியான இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் பத்து லட்சம் ஒரிஜினல் தொகுப்புகளுக்கு மேலாக விற்பனையாகி சரித்திரம் படைத்தது.

1993 : விண்டோஸ் என்.டி

32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.இந்த தொகுப்புடன் லைசென்ஸ் பெற்று விண்டோஸ் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டியது.

1995 : விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு மிகப் பெரிய அளவிலான விளம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் வெளியிடப்பட்டு வெளியாகி நான்கு நாட்களில் பத்து லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.

1998 : விண்டோஸ் 98

விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.

2000 : விண்டோஸ் 2000

2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த பதிப்பானது , இதற்கு முன்னர் வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும் .

2000 :
விண்டோஸ் ME (மில்லேனியம்)

விண்டோஸ் வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.

2001 :
விண்டோஸ் எக்ஸ்பி

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த பதிப்பு கோப்புகள் மேலாண்மை(File Management) , பாதுகாப்பு , உறுதி ,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

2007 : விண்டோஸ் விஸ்டா

பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.

2009 : விண்டோஸ் 7

விண்டோஸ் விஸ்டாவில் உள்ள பல குறைகளை நீக்கி மைக்ரோ சாப்ட் இந்த பதிப்பை வெளியிடவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் அஸுர் ( Windows Azure )

வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.

இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர்.

இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர்.

இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.

முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.

யு.எஸ்.பி. டிரைவில் கூகிள் குரோம் ஓ.எஸ்.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது.

நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால் கீழுள்ள முகவரில் டவுண்லோட் செய்யுங்கள் . பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.

விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

அடோப் பிளாஷ் பிளேயர் : புதிய பதிப்பு

அடோப் நிறுவனம் தன் பிளாஷ் பிளேயர் 9க்கான அப்டேட் 3, தன் இணைய தளத்தில் இலவசமாக இறக்கிப் பயன்படுத்த தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் பைலில் H.264 என்னும் ஸ்டாண்டர்ட் வீடியோ சப்போர்ட் தரப்படுகிறது. இதனைத்தான் புளு ரே மற்றும் எச்.டி – டி.வி.டி. ஸ்டாண்டர்டாகப் பயன்படுத்துகின்றன. HEAAC ஆடியோ தொழில் நுட்பமும் இதனையே பயன்படுத்துகிறது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிரவுசர்களிலும் அதிக ரெசல்யூசன் திறனுடன் காண இந்த அப்டேட் பைல் வழி தருகிறது.

இன்டர்நெட் டிவி காண்பதில் அடோப் பிளாஷ் தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடோப் பிளாஷ் பிளேயர் மற்றும் அடோப் கிரியேட்டிவ் சூட் ஆகியவற்றில் H.264தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது, பல லட்சக்கணக்கான பிளாஷ் டெவலப்பர் களுக்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். மேலும் இப்போது இன்டர்நெட் வழியாக தங்களுக்குப் பிடித்த படங்களையும் வீடியோ காட்சிகளையும் பார்க்கும் பழக்கம் அனைத்து நாடுகளிலும் மக்களிடையே பரவி வருகிறது. அவர்களுக்கும் இந்த ஸ்டாண்டர்ட் தொழில் நுட்பம் இணைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை த்தரலாம்.

அடோப் பிளாஷ் பிளேயர் 9 அப்ளிகேஷன் சாப்ட்வேர் விண்டோஸ், மேக் இன்டோஷ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் கிடைக்கிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்